News October 23, 2024

72 வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

image

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். அதைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று 72-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 30, 2025

கொண்டலாம்பட்டி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பெண் பலி

image

கருங்கல்பட்டியை சேர்ந்த பிரியா (30) கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று (நவ. 29) இரவு பணி முடித்துவிட்டு, தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, பாலிகாடு அருகே அந்த வழியாக வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 30, 2025

சேலத்தில் பல லட்சம் மோசடி அதிர்ச்சி தகவல்!

image

சேலம் பனமடல் பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி படித்த 29 வயதான வாலிபர் சைபர் கிரைமில் புகார் தெரிவித்துள்ளார் அதில் பேஸ்புக் வாயிலாக மொழிவதனா பெண் பழக்கமானதாகவும் ஆன்லைனில் வணிகம் செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி ரூபாய் 15,33,000 வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் திரும்ப பெற்றுத் தருமாறும் தெரிவித்துள்ளார். பேராசையில் ஏமாறும் செயல் சேலத்தில் அதிகரித்துள்ளது

News November 30, 2025

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (நவ.29) இரவு முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!