News April 30, 2025
71ஆவது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்று கொண்டார். மடத்தின் தற்போதைய (70ஆவது) பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னர் இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71ஆவது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Similar News
News October 27, 2025
அறிவித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 100 BC, MBC மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டத்திற்கு www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் வழங்கலாம்.
News October 27, 2025
காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழக வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், விரைவில் அதி தீவிர புயலாக மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். உங்க ஏரியால மழை பெய்யுதா…?
News October 27, 2025
காஞ்சி: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


