News October 20, 2025
7000 கி.மீ அப்பால்.. களைகட்டிய தீபாவளி!

இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் 25-வது ஆண்டு தீபாவளி விழா களைகட்டியுள்ளது. இந்தியர்களுடன் சேர்ந்து உள்ளூர் வாசிகளும் இந்த விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் பல்வேறு வடிவிலான உருவங்களுடன் மக்கள் வலம் வந்தனர். இந்தியாவிலிருந்து 7000 கி.மீ அப்பால் நடைபெற்ற இந்த விழாவின் போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
Similar News
News October 20, 2025
கால்களால் உணவை சுவைக்கும் உயிரினம் எது தெரியுமா?

பலருக்கும் பிடித்த பட்டாம்பூச்சிகள் கால்களால் தான் உணவை சுவைக்கின்றன. பட்டாம்பூச்சிகளுக்கு கால்களில்தான் சுவை மொட்டுகள் உள்ளது. எனவே, அவை பூக்கள் (அ) பிற தாவரங்கள் மீது உட்காரும்போது கால்களை பயன்படுத்தி, உணவின் சுவையையும், ஊட்டச்சத்துகளையும் சுவைக்கிறது. இதன்பிறகுதான், தன்னுடைய நாக்கை பயன்படுத்தி உணவை உறிஞ்சி சாப்பிடுகின்றன. இயற்கையின் இந்த அற்புதத்தை அனைவரும் அறிய SHARE பண்ணுங்க.
News October 20, 2025
மார்க் ஷீட் தொலஞ்சிடுச்சா? ஆதார் இருந்தாலே போதும்

10th, +2, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்களை உடனடியாக பெற வேண்டுமா? <
News October 20, 2025
தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்கிறேன்: ஸ்மிருதி மந்தனா

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் தோற்றதற்கு முழு பொறுப்பையும் ஏற்பதாக ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். 52 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில், 88 ரன்கள் எடுத்து நன்கு செட்டாகியிருந்த மந்தனா தேவையின்றி தூக்கி அடித்து அவுட்டானார். இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும் என வருந்தியுள்ள ஸ்மிருதி மந்தனா, தவறான ஷாட்களை ஆடியதே தோல்விக்கான காரணம் என்றும் கூறியுள்ளார்.