News March 31, 2025
தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் மரணம்!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி அங்கு அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், சுமார் 2,500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ரமலான் மாதம் என்பதால் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் மசூதியின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 2, 2025
ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
News April 2, 2025
1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.
News April 2, 2025
சீனாவை அழைத்த வங்கதேசம்.. வடகிழக்கில் கொதிநிலை

வடகிழக்கு மாநிலங்களை லாக் செய்ய, சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் என அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவர் யூனுஸ் பேசினார். இதை கண்டித்த அசாம் முதல்வர் சர்மா, வடகிழக்கு மாநிலங்களையும், பிரதான இந்தியாவையும் இணைக்க சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தை உடைக்க TMP தலைவர் மனிக்யாவும், மணிப்பூரை கண்டுக்காத அரசு, இதில் கவனம் செலுத்த காங். தலைவர் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.