News May 8, 2025
70 வயது மூதாட்டி 12-ம் வகுப்பில் பாஸ்..

70 வயது மூதாட்டி 12-ம் வகுப்பில் 348 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த ராணிக்கு கணவர் மறைவுக்கு பிறகு படிப்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே படித்து 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர் 348 மதிப்பெண் உடன் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் 89 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் வரலாற்றில் 52 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். ராணியின் ஆர்வத்தை பாராட்டலாமே..
Similar News
News November 9, 2025
ரயில்வேயில் 2,569 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

ரயில்வேயில் 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர் பணிகளுக்கு துறை சார்ந்த டிப்ளமோ படித்தவர்கள் விண்ணபிக்கலாம். உலோகவியல் உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி பட்டப்படிப்பு அவசியம். 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் நவ.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முதல் நிலை, 2-ம் நிலை என கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும்.
News November 9, 2025
டாப்-7 சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்!

இந்திய திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் டாப்-7 சிறந்த படங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். இவற்றில் சில படங்களை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம். படங்களின் விவரத்தை SWIPE செய்து தெரிந்து கொள்வதுடன், பார்க்காதவற்றை தவறாமல் OTT-ல் பார்க்கவும்.
News November 9, 2025
நவம்பர் 9: வரலாற்றில் இன்று

*1896-நாதசுவரக் கலைஞர் பி.எஸ்.வீருசாமி பிள்ளை பிறந்தநாள். *1959-வீணைக் கலைஞர் ஈ.காயத்ரி பிறந்தநாள். *1965-நடிகர் வேணு அரவிந்த் பிறந்தநாள். *1988-தேங்காய் சீனிவாசன் மறைந்த நாள். *1998-பி.எஸ்.வீரப்பா மறைந்த நாள். *2006-எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்த நாள். *2024-நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த நாள்.


