News February 16, 2025
உள்நாட்டுப் போரில் 70 பேர் சுட்டுக்கொலை

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர். கனிம வளங்கள் அதிகமுள்ள வடக்கு கீவூ, தெற்கு கீவூ உள்ளிட்ட மாகாணங்களை கைப்பற்ற, ருவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற M-23 கிளர்ச்சியாளர்கள் குழு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், அந்தப் பகுதிகளில் புகுந்த கிளர்ச்சியாளர்கள், தேவாலயத்தில் பதுங்கியிருந்த மக்களை சரமாரியாக தாக்கிக் கொன்றது.
Similar News
News March 12, 2026
பள்ளத்தில் மோதியதால் திரும்பி வந்த பெண்ணின் உயிர்!

டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்தால் ’மெடிக்கல் மிராக்கிள்’ என சொல்வதுண்டு. அப்படிப்பட்ட மிராக்கிள் சம்பவம் உ.பி.,யில் நடந்துள்ளது. மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட வினீதா சுக்லா என்ற பெண், இறுதிச் சடங்குகளுக்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். வழியில் ஆம்புலன்ஸ் ஒரு பள்ளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வலையில் அதிர்ஷ்டவசமாக அவரது உயிர் திரும்ப வந்துள்ளது.
News March 12, 2026
பாஜகவுடன் அதிமுகவை EPS இணைத்துவிடுவார்: உதயநிதி

வரும் தேர்தலில் பாஜக-அதிமுக அடங்கிய டெல்லி அணியை TN மக்கள் கிளீன் போல்ட் செய்வார்கள் என உதயநிதி கூறியுள்ளார். அரியலூரில் பேசிய அவர், தமிழகத்துக்கான 3,200 கோடி கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதியை தராமல் பாஜக அரசு வஞ்சிக்கிறது; இந்த அநியாயத்திற்கு EPS துணை போகிறார் என உதயநிதி குற்றஞ்சாட்டினார். அத்துடன் தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை EPS இணைத்துவிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்: இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. ▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.


