News May 14, 2024
70 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்

நாடு முழுவதும் 70 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பெரிய வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அது எதையுமே பாஜக நிறைவேற்றாது என்றும், அதுபோல்தான் கருப்பு பணம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை மோடி அளித்தார் என்றும் தெரிவித்தார். 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Similar News
News September 10, 2025
நேபாளத்துக்கு அடுத்து இந்தியா.. தேதி குறித்த ஜோதிடர்

2039-க்கு பிறகு இந்தியாவில் மக்களாட்சி முடிவுக்கு வரும் என ஜோதிடர் பிரஷாந்த் கினி கணித்துள்ளார். 2039-ல் பாஜக ஆட்சியை இழக்கும் எனவும், அதன்பிறகு நாட்டில் தேர்தலே நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, <<17664211>>நேபாளத்தில்<<>> போராட்டம் வெடித்து ஆட்சி கவிழும் என கடந்த 2023-ம் ஆண்டே கணித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் தான் பிரஷாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 10, 2025
நாட்டை விட்டு தப்பியோடிய தலைவர்கள்

இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் தற்போது சிறையிலும், நாட்டை விட்டு தப்பி ஓடியும், தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சி, மாணவர்களின் போராட்டங்கள் இத்தகைய தலைவர்களின் அரசியல் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளன. இதனால் தெற்காசிய நாடுகளின் புவிசார் அரசியலே பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளன. மேலே Swipe செய்து வீழ்ந்த தலைவர்களை தெரிந்துகொள்ளுங்கள்.
News September 10, 2025
நாளை கடைசி: ITI தேர்ச்சி போதும்.. 2,418 பணியிடங்கள்..!

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2,418 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். ஃபிட்டர், கார்பெண்டர், பெயிண்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 – 24 வயதிற்குள் இருப்பது அவசியம். விண்ணப்பக் கட்டணம் ₹100. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <