News October 17, 2025
EWS இடஒதுக்கீட்டில் 70 சாதிகள்: வானதி சீனிவாசன்

கோவில்களில் குடமுழுக்கின் போது தமிழில் அர்ச்சனை செய்வது போல், சமஸ்கிருதத்திலும் செய்ய வேண்டும் என நேற்றைய சட்டசபையில் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்தான், சமஸ்கிருதம் வராது என சபாநாயகர் அப்பாவு கூறினார். மேலும், EWS இடஒதுக்கீட்டில் 70-க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதாகவும், தமிழகத்தில் அவர்களால் இடஒதுக்கீட்டை அணுகமுடியவில்லை என்றும் வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்தார்.
Similar News
News October 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 492 ▶குறள்: முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். ▶பொருள்: பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.
News October 18, 2025
இந்து பெண்கள் ஜிம்முக்கு போக கூடாது: பாஜக MLA

பெண்கள் குறித்து மகாராஷ்டிரா பாஜக MLA கோபிசந்த் பதல்கர் பேசியது பேசுபொருளாகியுள்ளது. இந்து பெண்கள் ஜிம்முக்கு போக கூடாது, அங்குள்ள பயிற்சியாளர் யார் என்றே தெரியாமல், சிரித்து பேசி ஏமாற்றிவிடுவார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், ஜிம்முக்கு பதிலாக வீட்டில் யோகா செய்வதே சிறந்தது என்றும் அறிவுறுத்தியுள்ளார். MLA-ன் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
News October 18, 2025
International Roundup: 9 சீன ராணுவ தளபதிகள் டிஸ்மிஸ்

*உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். *காசாவில் இடைக்கால அரசு அமைந்தாலும், ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என ஹமாஸ் அறிவிப்பு. *அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரை நிறுத்த வேண்டும் என WTO கேட்டுக்கொண்டுள்ளது. *மடகாஸ்கரில் ராணுவ கர்னல் மைக்கெல் ரந்திரியனிரினா அதிபராக பொறுப்பேற்றார். *சீன கம்யூனிஸ்ட் கட்சி 9 ராணுவ தளபதிகளை டிஸ்மிஸ் செய்துள்ளது