News January 20, 2025

7 தடுப்பூசிகளை அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும்

image

இன்புளூயன்சா ஏ, பி, டைபாய்டு உள்ளிட்ட 7 தடுப்பூசிகளை அரசு தடுப்பூசி பட்டியலில் சேர்க்க வேண்டுமென குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 20 தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டாலும் 13 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. செலவினங்களை கருத்தில் கொண்டு அனைத்தையும் உடனடியாக சேர்ப்பது சாத்தியமில்லை என்றாலும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Similar News

News March 8, 2026

கோடிக்கணக்கில் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

image

ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்கா, தற்போது ஆயுத விற்பனையை தொடங்கியுள்ளது. அதன்படி ₹1,290 கோடி மதிப்புடைய ஆயத விற்பனையை செய்ய தனது அவசர அதிகாரத்தை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் தலா 1,000 பவுண்டுகள் எடையுள்ள 12,000 குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளது அமெரிக்கா. அத்துடன் முக்கிய தொழில்நுட்ப சேவைகளும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட உள்ளது.

News March 8, 2026

இலவசம் என்பது வளர்ச்​சியல்ல, அது வீழ்ச்சி: சீமான்

image

இது​வரை இருக்​கின்ற அரசி​யல் கோட்​பாடு, நிலைபாட்டில் முற்​றி​லு​மாக தங்கள் கட்சியின் கோட்பாடு மாறுபட்டது என சீமான் பேசியுள்ளார். புதுச்சேரி வேட்​பாளர் அறி​முக கூட்​டத்தில் பேசிய அவர், அனைத்துக்கும் இலவசம் அறிவிக்​கிறார்​கள். இலவசம் என்பது வளர்ச்​சித் திட்​டம் அல்ல. அது வீழ்ச்சி திட்​டம். கவர்ச்சி திட்​டம் என்றார். இலவசம் பெற வேண்டிய வறுமை இன்றி மக்​களை உயர்த்துவதே தமது கடமை எனவும் தெரிவித்தார்.

News March 8, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்: அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். ▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.

error: Content is protected !!