News August 20, 2024
தமிழகத்திற்கு 7 மடங்கு அதிக நிதி

காங்., ஒதுக்கியதை விட தமிழகத்திற்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். காங்., ஆட்சியில் ₹879 கோடி ஒதுக்கீடு செய்ததாகவும், பாஜக ₹6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறிய அவர், நிலம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்தால் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றார். போதிய நிதி ஒதுக்கும்படி CM ஸ்டாலின் கோரிய நிலையில், இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
Similar News
News March 17, 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி?

தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் கனிமொழி, மாநில அரசியலிலும் ஈடுபட வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, திருவாரூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கனிமொழி போட்டியிட வேண்டும் என விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
News March 17, 2026
மம்தாவுக்கு எதிராக போட்டியிடும் அவரது EX தளபதி!

2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மே.வங்கத்திற்கு 144 பேரை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், CM மம்தா பானர்ஜியின் பபானிபூர் தொகுதியில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும், மம்தாவின் EX தேர்தல் படை தளபதியுமாக இருந்த சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளார். இவர், 2021 தேர்தலில் மம்தா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.