News April 30, 2024
சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாராயண்பூர், கண்கோர் மாவட்ட எல்லைப் பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்புப் படையினர், நக்சலைட்கள் இடையே தாக்குதல் நடந்த நிலையில், 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 87 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 150 பேர் வரை சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 28, 2026
மக்கள் தலைவராக இருந்தவர் அஜித் பவார்: மோடி இரங்கல்

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா DCM அஜித் பவாருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மக்கள் தலைவராக இருந்த அஜித் பவார் சமூகத்தின் அடிமட்டம் வரை தொடர்பில் இருந்தவர் எனவும் கூறியுள்ளார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் அளப்பரியது என குறிப்பிட்ட மோடி, அவரை இழந்து வாழும் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
விமான விபத்தில் மரணமடைந்த இந்திய பிரபலங்கள்!

மகாராஷ்டிரா DCM <<18980498>>அஜித் பவார்<<>>, விமான விபத்தில் இன்று மரணமடைந்துள்ள செய்தி, நாட்டை அதிரவைத்துள்ளது. விமான விபத்தில் இந்தியாவின் பிரபலம் ஒருவர் மரணமடைவது இது முதல்முறை அல்ல. பிரபல நடிகை முதல் முன்னாள் CM-கள் வரை பலரும் விமான விபத்துகளில் மரணமடைந்துள்ளனர். அவர்கள் யார் யார் என அறிய மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து பாருங்க. #RIPAjit
News January 28, 2026
கடைசிவரை நிறைவேறாமல் போன அஜித் பவாரின் ஆசை

மகாராஷ்டிரா அரசியலின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருந்த அஜித் பவாரின் ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை. முதல்வராக வேண்டும் என்ற தனது கனவை பலமுறை பொதுமேடைகளிலேயே பவார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். முதல்வராக அரசியல் களத்தில் மேற்கொண்ட காய் நகர்த்தல்கள் அவருக்கு கடைசிவரை கைகொடுக்கவில்லை. மகாராஷ்டிராவில் 6 முறை DCM-ஆக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவரால், கடைசிவரை முதல்வராக முடியவில்லை.


