News April 7, 2025
19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
Similar News
News October 14, 2025
சற்றுநேரத்தில் விஜய்யை சந்திக்கிறார்

தலைமறைவான தவெக பொதுச் செயலாளர் N.ஆனந்த் 15 நாள்களுக்கு பிறகு இன்று விஜய்யை சந்திக்கவிருக்கிறார். கரூர் துயர வழக்கில் அவரின் முன்ஜாமின் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியதால், அவர் தலைமறைவானார். 15 நாள்களாக எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்நிலையில், SC-யின் தீர்ப்பு தவெகவுக்கு சாதகமாக வந்ததால், இன்று விஜய்யை சந்திக்கவுள்ளார்.
News October 14, 2025
விஜய்யின் அடுத்த திட்டம் என்ன? அருண்ராஜ் விளக்கம்

SC தீர்ப்புக்கு பிறகு தவெக நிர்வாகிகள் நேற்று இரவு விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், பேசிய அருண்ராஜ், SC தீர்ப்பு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதால், உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், N.ஆனந்த் உள்ளிட்டோர் இன்று(அக்.14) விஜய்யை சந்தித்து அடுத்தக்கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
News October 14, 2025
விஜய்யை பார்த்ததும் செந்தில் பாலாஜியை அட்டாக் செய்த CTR

விஜய் உடனான சந்திப்புக்கு பின், CTR நிர்மல்குமாரிடம் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே SC-யில் மனு தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பிறழ்சாட்சியாக மாற்றுவதில் மன்னராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அவரின் பழைய வழக்கில் 50 பேரையே பிறழ்சாட்சியாக சொல்ல வைத்த செந்தில் பாலாஜிக்கு, இங்குள்ள 4 பேரை மிரட்டி மாத்தி பேச வைப்பது பெரிய விஷயம் அல்ல என்றார்.