News June 8, 2024
சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பகுதியில் ரகசியத் தகவலின்பேரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் அவர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படை வீரர்களும் 3 பேர் காயமடைந்தனர்.
Similar News
News September 24, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️DKP திருமண மண்டபம், மரக்காணம் ரோடு, திண்டிவனம்
▶️ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், ஆற்காடு
▶️பகிரதன் திருமண மண்டபம், வரிக்கல்
▶️சமுதாய கூடம், புதுரை
▶️முருகன் அடிகளார் திருமண மண்டபம், ராதாபுரம்
▶️ஸ்ரீ விஷ்ணு மஹால், பில்லூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 24, 2025
வயிற்று கொழுப்பு குறைய இந்த யோகா பண்ணுங்க!

உத்தான பாதாசனம் செய்வதால் செரிமான உறுப்புகள் வலிமையடைந்து, மலச்சிக்கல் பிரச்னை நீங்குவதுடன், வயிற்று கொழுப்பும் குறையும் ✦2 கால்களும் சேர்ந்து வைத்து, மல்லாந்து படுக்கவும் ✦கால்களை மடக்காமல் மேலே உயர்த்தவும். முடிந்தவரை உயர்த்தினால் போதும் ✦2 கைகளையும் உடலுக்கு பக்கத்தில்(படத்தில் உள்ளது போல) வைக்கவும் ✦இந்த நிலையில், 10- 20 விநாடிகள் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News September 24, 2025
யுவராஜ் சிங்கிடம் 7 மணி நேரம் ED விசாரணை

ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரங்கள் வாயிலாக ஊக்குவித்த பிரபலங்களை ED விசாரித்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் ரெய்னா, உத்தப்பா உள்ளிட்டோரிடமும் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று யுவராஜ் சிங்கிடம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். யுவராஜ் அளித்த பதில்களை ED வாக்குமூலமாக பதிவு செய்துள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் இன்று ED முன் ஆஜராக உள்ளார்.