News December 1, 2024

தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர்

image

தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முலுகு மாவட்டம் சல்பாக்கா அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இதில், நரசம்பேட்டையை சேர்ந்த 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது கடந்த 14 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என்று கூறப்படுகிறது.

Similar News

News September 8, 2025

பட்டா வகைகள் எத்தனை தெரியுமா?

image

நாம் உபயோகப்படுத்தும் பட்டாவில் பல வகைகள் உள்ளன. 1.யுடிஆர் பட்டா(UDR Patta). 2.தோராய பட்டா(Provisional Patta) 3.AD கண்டிஷன் பட்டா. 4. நில ஒப்படை பட்டா(விவசாயம் (அ) மனை). 5.கூட்டுப் பட்டா(Joint Patta). இப்படிப் பல வகை பட்டாக்கள் உள்ளன. மேலே இருக்கும் படங்களை SWIPE செய்து பட்டா வகைகளின் விவரங்களை அறியலாம். SHARE IT.

News September 8, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தேதி குறிச்சாச்சா?

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. புதிதாக ₹1,000 பெற தகுதியானவர்களின் முதல்கட்ட பட்டியல் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த திட்டம் தொடங்கிய செப்.15-ம் தேதியை கணக்கில் கொண்டு புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருக்கிறதாம். தற்போது 1.2 கோடி பேர் ₹1,000 பெற்று வருகின்றனர்.

News September 8, 2025

ஏடிஎம் PIN நம்பராக இதனை வைக்க வேண்டாம்!

image

ஏடிஎம் PIN நம்பரை யூகிக்க முடியாத வகையில் வைப்பது அவசியம். 1234, 4321, 1111, 2222 போன்றவற்றை ஹேக்கர்களால் ஈசியாக கண்டறிய முடியும். உங்கள் பிறந்த தேதி, செல்போன் எண்ணின் கடைசி 4 நம்பர், வண்டி நம்பர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். இதனை நினைவில் வைப்பது எளிது என்றாலும், இதுபோன்ற எண்களை ஈசியாக திருடலாம். உங்களுக்கு தொடர்பில்லாத சீரற்ற நம்பரை (e.g. 4681, 9573) பயன்படுத்துவது நல்லது. SHARE IT.

error: Content is protected !!