News January 22, 2025
கெஜ்ரிவால் வைக்கும் 7 முக்கிய வேண்டுகோள்கள்

மத்திய அரசுக்கு AAP தலைவர் கெஜ்ரிவால் 7 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். *வரும் பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்திற்கு 10% நிதி ஒதுக்குக. *தனியார் பள்ளிகளில் கட்டணத்தைக் குறைத்து வரம்பு நிர்ணயம் செய்க. *உயர்க்கல்விக்கு மானியம் வழங்குக. *வருமான வரி விலக்கு ₹7லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்துக. *அத்தியாவசிய பொருட்களுக்கு GSTயை நீக்குக. *ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு 50% சலுகை வழங்க கோரியுள்ளார்.
Similar News
News November 16, 2025
அதிசயமே அசந்து போகும் ராஷி கண்ணா

ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வருகிறார். அரண்மனை 3&4 படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணாவுக்கு, பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது, பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களில், சிலை போல போஸ் கொடுத்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 16, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்றிரவோ (அ) நாளை காலையோ தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 16, 2025
BREAKING: விஜய் – உதயநிதி மோதல்

திமுக சார்பில் நடைபெற்றுவரும் அறிவுத் திருவிழாவை விமர்சித்த விஜய்க்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக நடத்துவது அறிவுத் திருவிழாவா? அவதூறு திருவிழாவா? என விமர்சித்திருந்தார். இந்நிலையில், அறிவு இருப்பவர்கள் திருவிழா நடத்துவார்கள், தவெகவினருக்கு அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜி என உதயநிதி மறைமுகமாக விஜய்யை சாடியுள்ளார்.


