News April 4, 2024
ஒரே நாளில் 7 படம் ரீலிஸ்

தமிழகத்தில் நாளை ஒரே நாளில் ஏழு படங்கள் ரீலிஸ் செய்யப்பட உள்ளன. இரவின் கண்கள், ஆலகாலம், ஒரு தவறு செய்தால், டபுள் டக்கர், வல்லவன் வகுத்ததடா, கயல் ஆனந்தி நடித்த ஒயிட் ரோஸ் ஆகிய 6 நேரடி தமிழ் படங்களும், விஜய் தேவரகொண்டாவின் தி ஃபேமலி ஸ்டார் படம் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியாக உள்ளன. முன்னதாக ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா, இவானா நடிப்பில் கள்வன் திரைப்படம் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 29, 2026
தென்காசி: மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவன்

திருவேங்கடம் பகுதியை சேர்ந்த ரகுவரன் (29) சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும், இவரது மனைவி சங்கீதா (26) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சங்கீதாவிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. தப்பியோடிய சங்கிதா அளித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் ரகுவரனை கைது செய்தனர்.
News January 29, 2026
திமுகவுக்கு இதுதான் வில்லன்: கடம்பூர் ராஜூ

2021 தேர்தல் வாக்குறுதியில் 15% கூட நிறைவேற்றாததால் இம்முறை அவர்களின் தேர்தல் அறிக்கை அவர்களுக்கே வில்லனாக மாறும் என கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதால் திமுகவுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்ற அவர், திமுகதான் ஓடாத இன்ஜின், அது இனியும் ஓடாது என்றார். மேலும், அதிமுக கூட்டணி நிச்சயமாக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
விரைவில் தமிழக தேர்தல் தேதி.. ECI ஆலோசனை

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கு ECI அழைப்பு விடுத்துள்ளது.


