News August 7, 2024
அக்டோபரில் 7 படங்கள் ரிலீஸுக்கு தயார்

அக்டோபரில் ஆயுதபூஜையையொட்டி விடுமுறை வருவதால், அடுத்தடுத்து புதிய படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. அதன்படி, ரஜினியின் வேட்டையன், வெற்றி மாறனின் விடுதலை 2, சூர்யாவின் கங்குவா, ஜெயம் ரவியின் பிரதர், அஜித்தின் விடா முயற்சி, விஜய்யின் கோட், சிவகார்த்திகேயனின் அமரன் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இதனால் திரைப்பட ரசிகர்களுக்கு அக்டோபரில் நல்ல விருந்து காத்திருக்கிறது.
Similar News
News March 25, 2026
தொகுதி ஒதுக்கீடு.. மதிமுக மா.செ. ஆதங்கம்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு பிற கட்சிகளை விட குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மதிமுக மா.செ. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், இதற்காக நாங்கள் தேர்தல் பணியில் பின்தங்க மாட்டோம். கட்சித் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, தோழமைக் கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
News March 25, 2026
தமிழக அணிக்கே வெற்றி: உதயநிதி

டெல்லி அணிக்கும் தமிழகத்துக்குமான தேர்தலில் தமிழக அணியே வெற்றி பெறும் என்று உதயநிதி பேசியுள்ளார். தொகுதி பங்கீட்டை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து வந்து உதயநிதி அதிமுகவையும் பாஜகவையும் கடுமையாக சாடி வருகிறார். திண்டுக்கல் கூட்டத்தில், 10 தோல்வி அடைந்த பழனிசாமி தேர்தலுக்கு பின் படுதோல்வி பழனிசாமி ஆகிவிடுவார் என்று சாடினார்.
News March 25, 2026
போர் பதற்றம்.. எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை

மேற்காசிய போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டில் நிலவும் எரிவாயு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில், அரசு எடுத்துள்ள நடவடிக்கைள், கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


