News October 16, 2024
7 விரைவு ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் பேசின்பிரிட்ஜ் பகுதி தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால், கீழ்காணும் 7 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 1) போடி ரயில் 2) ஜோலார்பேட்டை -சென்ட்ரல் ஏலகிரி ரயில் 3) சென்ட்ரல் ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் 4) திருப்பதி – சென்ட்ரல் ரயில் 5) சென்ட்ரல் -திருப்பதி ரயில் 6) திருப்பதி- சென்ட்ரல் சப்தகிரி ரயில் 7) ஈரோடு-சென்ட்ரல் ஏற்காடு ரயில்.
Similar News
News August 15, 2025
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அன்பில் மகேஷ் சவால்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச்சூழல் தொடர்ந்து சரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், உண்மையிலேயே தங்களுக்கு தமிழக அரசுப்பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி ‘தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி என்னவானது?’ என கேளுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
News August 15, 2025
சுதந்திர தினம் – குடியரசு தினம் வித்தியாசங்கள்

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் சுதந்திர தினமாகும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட தினம் குடியரசு தினமாகும். சுதந்திர தினத்தில் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார். கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும். குடியரசு தினத்தில் ராஜ்பாத்தில் கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும், ஜனாதிபதி கொடியை அவிழ்த்து விடுவார்.
News August 15, 2025
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை?

தமிழகம் வந்த பாஜகவை சேர்ந்த பி.எல்.சந்தோஷ் OPS-யை சந்திக்கவில்லை. இது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகிவுள்ளன. அதில், OPS-யை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டதாகவும், ஆனால் இந்த சந்திப்பால் இபிஎஸ் அதிருப்தி ஆகிவிடக்கூடாது, மேலும் அண்ணாமலையின் முயற்சி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது போல் தெரிவதால் சந்திப்பை தவிர்க்குமாறும் பாஜக மூத்த நிர்வாகிகள் சந்தோஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.