News March 31, 2024
Uber ஆட்டோவில் பயணித்தவருக்கு 7.66 கோடி பில்

Uber ஆட்டோவில் பயணம் செய்த ஒரு நபருக்கு ரூ.7.66 கோடி பில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபக் என்ற நபர் ரூ.62க்கு Uber ஆட்டோ புக் செய்துள்ளார். பயண தூரத்தை அடைந்தபின் அவருக்கு ரூ.7,6கோடிக்கு பில் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். பயணக் கட்டணம் ரூ. 1,67,74,647, காத்திருப்பு கட்டணம் ரூ. 5,99,09189 என பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுதலாக இது நடந்ததாக Uber மன்னிப்பு கேட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
SIR படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி?

2026 தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, SIR படிவத்தை நாம் பூர்த்தி செய்வது அவசியமாகும். இதில் என்னென்ன விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும்? என சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் SIR கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் வழங்க வேண்டிய விவரங்கள் குறித்து, போட்டோக்களுடன் கூடிய எளிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.
News November 9, 2025
பிக்பாஸில் இரட்டை எவிக்ஷன்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்

BB தமிழ் சீசன் 9-ல் முதல் முறையாக ஒரே வாரத்தில் 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் ரம்யாவும், துஷாரும் எவிக்ட் ஆனதாக தகவல் பரவியது. தற்போது, துஷாரும், பிரவீன் ராஜ்தேவும் எலிமினேட் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. பிரவீன் ராஜ்தேவ் அன்அபிசியல் வாக்குப்பதிவில் லீடிங்கில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் எப்படி எவிக்ட் ஆனார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
News November 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 9, ஐப்பசி 23 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை


