News August 2, 2024
7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

இந்தியாவில் 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7.5% அதிகமாகும். சுமார் 5.27 கோடி பேர் புதிய வருமான வரி விகித முறையிலும், 2.01 கோடி பேர் பழைய வருமான வரி முறையிலும் ஐடி தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 72% பேர் புதிய வருமான வரி விகித முறைக்கு மாறியுள்ளனர். 58.57 லட்சம் பேர் முதல்முறையாக ஐடி தாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News January 6, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 6, 2026
FLASH: தளபதி கச்சேரி புக்கிங் தொடங்கியது

Bookmyshow, Ticketnew போன்ற தளங்களில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டிக்கெட் புக்கிங் தமிழகத்தில் தொடங்கியது. சென்சார் சான்றிதழ் லேட்டான சூழலில், ‘தளபதி கச்சேரி’ புக்கிங் எப்போது என நேற்று முதலே ரசிகர்கள் தவித்து போயிருந்தனர். H.வினோத் இயக்கத்தில் விஜய்யுடன் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நீங்க டிக்கெட் போட்டாச்சா?
News January 6, 2026
தங்கம் சவரனுக்கு ₹560 உயர்ந்தது

ஆபரண தங்கம் விலை இன்று(ஜன.6) கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹12,830-க்கும், சவரன் ₹560 உயர்ந்து ₹1,02,640-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை சரிவுடன் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,120 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


