News September 15, 2024

7 வயது சிறுமி மாநில ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதி

image

தென்காசி மாவட்டம் தலைவன் கோட்டையை சேர்ந்த மு.ஜெயகணேசன் கோகிலா என்பவர்களின் மகள் J.முவித்ரா(7) ஸ்கேட்டிங் போட்டியில் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். அவருக்கு இன்று பயிற்சியாளர், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Similar News

News February 5, 2026

தென்காசி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு!

image

தென்காசி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.02.2026 அன்று மஞ்சம்மாள் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் முற்பகல் 243 தேர்வர்களும் பிற்பகல் 244 தேர்வர்களும் எழுதவுள்ளனர். தேர்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் மற்றும் மதியம் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெறும்.

News February 5, 2026

தென்காசியில் சல்லி சல்லியாக நொறுங்கிய வாகனம்

image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இன்று யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பழமையான புளியமரம் முறிந்து விழுந்தது. இதில் ஸ்டாண்டில் நிறுத்தி இருந்த தங்கராஜ் என்பவரின் ஆட்டோ சேதமடைந்தது. போக்குவரத்து மிகுந்த அந்த பகுதியில் அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

News February 5, 2026

தென்காசி மாவட்ட இன்றைய இரவு நேர ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (04/01/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!