News October 21, 2025

7-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது

image

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை இன்று 120 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் ஏழாவது முறையாக அணை நிரம்பி வரலாறு படைத்துள்ளது. தற்போது அணையின் நீர் நிலை 14,420 கன அடியாகவும், வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது. பருவமழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Similar News

News February 12, 2026

சேலம்: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

image

சேலம் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) <>இங்கு கிளிக்<<>> செய்து நீங்கள் புகார் அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி, அவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News February 12, 2026

சேலம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News February 12, 2026

நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி: தவெக

image

சேலத்தில் நாளை (பிப்.13) நடைபெறும் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!