News March 29, 2025

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியில் கோயில் கட்டுமான வேலை செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த முனிரத்தினம் (56) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கட்டிட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து நேற்று (மார்.28) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 1, 2026

திருப்பத்தூர்: அரசின் முக்கிய தொடர்பு எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 1, 2026

திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி வருகிற ஜனவரி 4 மற்றும் 5-ம் தேதிகளில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவள்ளி இன்று (ஜன.1) அறிவித்துள்ளார்.

News January 1, 2026

திருப்பத்தூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஜன.1) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இன்று வெளியிடப்பட்ட செய்தியில் இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவருக்கும் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- 2026 என செய்தி வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!