News June 4, 2024
7ஆவது முறையாக தோல்வி

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 1998 ,1999, 2004, 2009, 2014 ,2019 ஆகிய 6 முறை தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 7ஆவது முறையான இத்தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார்.
Similar News
News September 13, 2025
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டதைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள் டாக்டர்.அம்பேத்கர்
தமிழ்நாடு அரசு விருது பெறுவதற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பட்டியலின சமுதாய மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையினை உயர்த்துவதற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அதற்கான சான்றுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News September 12, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரி விவரங்கள்

தென்காசி மாவட்டம் எஸ்.பி அவர்களின் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (12.09.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான தென்காசி , ஆலங்குளம் , சங்கரன்கோவில் , புளியங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
தென்காசி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. வரும் 19ஆம் தேதி சுரண்டை நகராட்சி ,புதூர் பேரூராட்சி, மந்தியூர் ஊராட்சி, புதுக்குடி ஊராட்சி , குருக்கள்பட்டி ஊராட்சி, சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெறும் எனவும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறும்படியும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.