News April 14, 2024
இந்தியாவில் 6ஜி இணைய சேவை

தொலைத்தொடர்பு துறை தொடர்பாக பாஜக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடர்ந்து, 6ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். 2 லட்சம் கிராமங்களுக்கு பாரத்நெட் என்ற அதிவேக Broadband இணைய சேவை வழங்கப்படும். அரசு அலுவலகங்களை டிஜிட்டல் மயமாக்குவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல இளைஞர்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Similar News
News August 17, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் வங்கி தொடர்பான மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாருக்கும் OTP, PIN எண், CVV மற்றும் கார்டு எண்ணை எந்தச் சூழலிலும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் இத்தகவல்களை ஒருபோதும் கேட்காது. வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள். ஆன்லைன் நிதி மோசடிகள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
News August 17, 2025
நான் இருக்கிறேன்.. BCCI-க்கு சாம்சன் அனுப்பிய செய்தி!

ஆசிய கோப்பை நெருங்கி வரும் நிலையில், அணியில் இடம்பெறுவோமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், சஞ்சு சாம்சன் ஒரு செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் டி20 போட்டியில் அரைசதம் அடித்து, KCA செயலாளர் லெவன் அணிக்கு வெற்றிக்கு உதவியுள்ளார். 36 பந்துகளில் 54 ரன்களை விளாசி, தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் எனும் செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.
News August 17, 2025
அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.