News March 18, 2024
நல வாரியங்கள் மூலம் ரூ.68.38 கோடி நலத்திட்டம்

சேலம் மாவட்டத்தில் கடந்த 2.5 ஆண்டுகளில் பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 97,761 பேருக்கு ரூ.68.38 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு மற்றும் இதர 16 வகை தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் பிரிவில் 83,553 பேருக்கு கல்விக்காக மட்டும் ரூ.18.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 15, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News August 14, 2025
700 ஆண்டுகள் பழமை: பள்ளி மாணவர்கள் அசத்தல்!

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கொடுத்த தகவலின்படி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் அன்பரசி, விஜயகுமார் மாணவர்களுடன் சென்று ஆய்வு செய்தபோது அது 700 ஆண்டுகள் பழமையான, 13-ஆம் நூற்றாண்டு போர் வீரன் நடுகல் என உறுதி செய்யப்பட்டது.