News December 9, 2024
அரசு சேவைக்கு 66% லஞ்சம்.. ஆய்வு முடிவு சொல்வது என்ன?

அரசு சேவையை பெற 66% வணிக நிறுவனங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது LocalCircles சர்வேயில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 159 மாவட்டங்களில் 18,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 46% பேர் தானாக முன் வந்து லஞ்சம் கொடுத்ததாகவும், 16% பேர் லஞ்சம் கொடுக்காமல் அரசின் சேவைகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். டிஜிட்டல் மயம், CCTV வளர்ந்த போதிலும் இன்னும் லஞ்சம் ஒழியவில்லையே..!
Similar News
News August 26, 2025
திமுக அரசு செய்யாததை தொகுத்து புத்தகம்: அன்புமணி

சென்னையில் பாமக சார்பில் விடியல் எங்கே என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அன்புமணி, திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் முழுமையாக நிறைவேற்றப்பட்டவை 66 என்றும், அரைக்குறையாக நிறைவேற்றப்பட்டவை 66, முழுமையாக நிறைவேற்றப்படாதவை 373 என்றார். திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94% வாக்குறுதிகளே முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.
News August 26, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪காலை <<17520101>>உணவுத் <<>>திட்டத்தை விரிவுப்படுத்திய CM ஸ்டாலின்!
✪விஜய்காந்த் நிலை <<17519989>>விஜய்க்கும் <<>>வரலாம்.. செல்வப்பெருந்தகை
✪தங்கம் <<17520504>>விலை <<>>சவரனுக்கு ₹400 உயர்வு
✪இந்தியா <<17520480>>மீதான<<>> 50% வரி.. இடியை இறக்கிய USA
✪RCB <<17519842>>அணிக்கு <<>>திரும்ப ரெடி.. ABD
News August 26, 2025
₹2000 வரை கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி, மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களில் இரண்டு மடங்கு ( ₹2000 வரை) கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ₹4,000 வரையும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.