News June 10, 2024

66 பேர் மீது குண்டாஸ்: சென்னை கமிஷனர் அதிரடி

image

சென்னை பெருநகரில் கடந்த 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த மே.27 முதல் ஜூன் 9 வரையான வாரகாலத்தில் 1 பெண் உட்பட 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News July 11, 2025

சென்னை பல்கலை., முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

image

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை மற்றும் தொழிற்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை.11) மாலை வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://egovernance.unom.ac.in/results/ என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இத்தேர்வுகளின் முடிவுகளை, மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

News July 11, 2025

மன நிம்மதியை வழங்கும் கச்சாலீஸ்வரர்

image

சென்னை பாரீஸ் கார்னர் அருகே உள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்துள்ளது கச்சாலீஸ்வரர் கோயில். இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இங்கு மூலவர் லிங்கத்தின் பின்னால் ஐந்து தலைகளுடன் கூடிய சதாசிவம் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை தீபாராதனை செய்யப்படும்போது மட்டுமே காண முடியும். மன நிம்மதியை இழந்து தவிப்பவர்கள் இங்கு சென்று தியானம் செய்து வழிபட்டால் ஆறுதல் அடைய முடியும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶சென்னையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!