News October 8, 2024
66 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்புக்…

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 704 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 66384 மாணவ, மாணவிகளுக்கும், தேவையான பாடப்புத்தகங்கள் நோட்டுகள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கியதாக மாவட்ட கல்வி துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 29, 2025
ராணிப்பேட்: மின்தடையா? உடனே CALL பண்ணுங்க

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா? அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (ஷேர் பண்ணுங்க)
News August 29, 2025
இராணிப்பேட்: இலவச தையல் மிஷின் வேணுமா?

இராணிப்பேட்டை மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது இராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவலரை (6380843457) அனுகலாம். SHARE பண்ணுங்க.
News August 29, 2025
கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

இன்று பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தாங்கல் பகுதியில் பெரிய அளவிலான கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றி திரிந்த வாலிபரை பாணாவரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் சோளிங்கரை பகுதியைச் சேர்ந்த சுதன் 24 என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.