News April 13, 2025
65 வயதில் மறுமணம்; சித்த மருத்துவரை ஏமாற்றிய பெண்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன்(65). சித்த மருத்துவரான இவரை, திருமணம் செய்துகொள்வதாகச் கூறி, நகைகள் வாங்கி ஏமாற்றிய வழக்கில் 57 வயதான கீதா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் இதே மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து, கீதாவை சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 11, 2025
திருவண்ணாமலையில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம், இன்று (ஆக.11) திங்கள் கிழமை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் 8,10,12ம் வகுப்பு பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழிற்பயிற்சியில் சேர்ந்து 3 மாதம் முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி பெறலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.apprenticeshipindia.govin பதிவு செய்து வரவும்.
News August 11, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 11) நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News August 10, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 10) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.