News April 13, 2025

65 வயதில் மறுமணம்; சித்த மருத்துவரை ஏமாற்றிய பெண்

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன்(65). சித்த மருத்துவரான இவரை, திருமணம் செய்துகொள்வதாகச் கூறி, நகைகள் வாங்கி ஏமாற்றிய வழக்கில் 57 வயதான கீதா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் இதே மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து, கீதாவை சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 29, 2025

தி.மலை: 19 வயது வாலிபர் மீது போக்சோ!

image

தி.மலை: செய்யாறு அருகே 19 வயது இளைஞரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் திருமண பேச்சால் இருவரும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி 3 மாதம் கருவுற்றது தெரியவந்தது. மகளிர் காவல் நிலையம் POCSO 2012, பிரிவு 3, 4, 6 மற்றும் சிறுவர் திருமணத் தடுப்பு சட்டம் 9, 11 கீழ் வழக்கு பதிவு செய்து பெற்றோர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர்.

News October 29, 2025

தி.மலை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 29, 2025

கல்லூரி மாணவி மீது பாய்ந்த POCSO!

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி, 10ஆம் வகுப்பு மாணவனுடன் உறவில் ஈடுபட்டு 3 மாதம் கருவுற்றது தெரியவந்தது. சிறுவன் 16 வயதானதால் மகளிர் காவல் நிலையம் POCSO Act 2012 பிரிவு 3, 4, 6 மற்றும் IPC 1860 பிரிவு 376 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றப்பொறுப்பு மாணவி மீதே பாயும். தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டு முதல் ஆயுள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

error: Content is protected !!