News June 4, 2024
64,674 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 17 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,89,159, அதிமுக – 3,24,476, பாமக – 1,50,188, நாம் தமிழர் – 47,958 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 64,674 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News July 7, 2025
விழுப்புரம் அரசு பள்ளிக்கு பேராசிரியர் அன்பழகன் விருது

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் சிறந்த பள்ளிக்கான விருது இன்று (ஜூலை 6) வழங்கப்பட்டது. கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி நலன் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்விருதை வழங்கினார்.
News July 6, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜுலை.06) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலன் கருதி இத்திட்டத்தை அமல்படுத்த அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.