News March 21, 2025
ரயில்வேயில் 642 பணியிடங்கள்.. ₹1.60 லட்சம் வரை சம்பளம்!

ரயில்வேயில் ஜூனியர் மேனேஜர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 642 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலைப்பிரிவுகளுக்கு ஏற்றபடி கல்வித்தகுதி வேறுபடுகிறது. குறைந்தபட்சம் மாதம் ₹16,000, அதிகபட்சம் ₹1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 18- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News March 21, 2025
கூட்டணி.. இபிஎஸ் புதுக்கணக்கு

அரசியல் ரீதியாக திமுக மட்டுமே அதிமுகவிற்கு எதிரி, மற்ற யாரும் (பாஜக) எதிரி இல்லை என இபிஎஸ் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது; மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு எனக் கூறிய அவர், தேர்தல் வரும்போது கூட்டணியை முடிவு செய்வோம் என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு BJP- ADMK கூட்டணிக்கு அச்சாரமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News March 21, 2025
அதிமுகவில் இருந்து டி.ஜெ., விலகலா? விளக்கம்

இபிஎஸ் வலது கையாக செயல்படும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகியுள்ளதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. அதில், இபிஎஸ் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; மீண்டும் அவர் பாஜக உடன் கூட்டணி வைத்தால், மீண்டும் இணைவேன் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி; இதை யாரும் நம்ப வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
News March 21, 2025
IPL: வெற்றியாளர்கள் இவர்கள்தான்.. வீரர்கள் கணிப்பு

IPL 2025ல் எந்த அணி வெற்றி பெறும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். * சேவாக்- LSG, * கில்கிறிஸ்ட்- PBKS, * ரோஹன் கவாஸ்கர்- RCB, * பொல்லாக்- MI/SRH * திவாரி- SRH * சைமன் டவுல்- PBKS * எம்பாங்வா- GT * ஹர்ஷா போக்லே, மைக்கேல் வாகன் – MI. எந்த அணி வெற்றி பெறும் என்று நீங்க நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க.