News April 19, 2024
தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு

5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 63.20 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 67.52% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04% வாக்குப்பதிவு நடந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 72.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு இடைத் தேர்தலில் 56.60 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
Similar News
News August 19, 2025
மனிதாபிமானம் மலர்ந்தால் உலகம் அன்பின் தோட்டமாகும்

இன்று உலக மனிதாபிமான தினம். துயரத்தில் இருப்பவருக்கு நம்பிக்கையாக, பசியால் வாடுபவருக்கு அன்னமாக, கண்ணீரில் மூழ்குபவருக்கு ஆறுதலாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். மனிதர்களின் இதயத்தில் கருணை இருந்தால் உலகம் அமைதி அடைந்து, அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய தாயகமாகிறது. அதனை நோக்கி முன்னேறுவது மனிதனின் ஆகச்சிறந்த பணியாகும். மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது Best quality அல்ல, அது Basic quality.
News August 19, 2025
INDIA கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்., தலைவர் கார்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
News August 19, 2025
1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, பாம்பன், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில், இன்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.