News October 19, 2025
6,15,992 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
நேற்று (அக்.18) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,834 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,926 பேருந்துகள் மூலம் 2,56,152 பயணிகள் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 19, 2025
கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் காய்கறி, பழம், பூக்கள் வரத்து நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பணிபுரியும் இந்த சந்தையில், அந்நாளில் வர்த்தகம் நடைபெறாது.
News October 19, 2025
சென்னையில் நிவாரண மையங்கள் அதிகரிப்பு

சென்னை, அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், கிரேட்டர் சென்னை மாநகராட்சி நிவாரண மையங்களை 116 லிருந்து 215 ஆக உயர்த்தியுள்ளது. மின்தடை ஏற்படாத வகையில் அனைத்து மையங்களிலும் ஜென்செட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாய்கள், போர்வைகள், கொசு சுருள்கள், உணவு வசதி மற்றும் 106 சமையல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
News October 19, 2025
சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.