News April 11, 2025
இந்தியாவில் இருந்து 600 டன் ஐபோன் ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து USA-க்கு 600 டன் ஐ-போன்கள் (15 லட்சம் போன்கள்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை USA உயர்த்தியுள்ளது. இதை தற்காலிகமாக 90 நாட்கள் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். ஆதலால் வரி அமலுக்கு வரும் முன்பு, USA-க்கு அதிக ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் பணியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
நாயால் வந்த ED ரெய்டு!

பெங்களூரை சேர்ந்த சதீஷ் ₹50 கோடிக்கு ஓநாய் இன கேடாபாம்ப் ஒகாமி நாய் வாங்கியதா சோஷியல் மீடியாவுல பதிவிட்டாரே ஞாபகமிருக்கா? நெட்டிசன்கள் கூட அவர தூக்கி வெச்சு கொண்டாடுனாங்க. ஆனா, இதுல தான் ட்விஸ்ட். அது ஓநாய் இன நாயே இல்லையாம். பக்கத்து வீட்டுல வளர்ற இந்திய இன நாயாம். விலை கூட ஒரு லட்சமாம். ED அவரு வீட்டுக்கு போயி கிடுக்கிப்பிடி போட்டதுல சதீஷ் சரண்டரானாரு. எதுக்கு இந்த பெருமை?
News April 18, 2025
அழவில்லை; உரிமையை கேட்கிறோம்: CM பதிலடி

நாங்கள் அழவில்லை; உரிமையை தான் கேட்கிறோம் என PM மோடிக்கு CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாம்பன் திறப்பு விழாவில் பங்கேற்ற PM மோடி நிதி தரவில்லை என்பதற்காக சிலர் அழுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மத்திய அரசிடம் கையேந்த மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என குஜராத் CM ஆக இருந்தபோது PM கேட்டதை சுட்டிக்காட்டினார். நீங்கள் கேட்டால் சரி; நாங்கள் கேட்டால் தவறா? என்றார்.
News April 18, 2025
அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

பாஜக உடன் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அக்கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, <<16081235>>முன்னாள் MLA<<>> உள்பட பலர் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்காக, 53 ஆண்டு கால கட்சிப் பணியில் இருந்து விலகுவதாக பக்கீர் மைதீன் என்பவர், அதிமுக தலைமைக்கு எழுதிய கடிதம் வைரலாகிறது.