News October 24, 2025
1 விநாடிக்கு 600 GB வேகம்: ஸ்டார்லிங்க் பணிகள் துரிதம்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் சேவையை தொடங்க தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக மும்பை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட 9 நகரங்களில் சிக்னல் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 விநாடிக்கு 600 GB வேகத்தில் இண்டர்நெட் சேவை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News October 25, 2025
வங்கிக் கணக்கில் ₹2000… முக்கிய அறிவிப்பு

விவசாயிகளுக்கான PM கிசான் திட்ட 21-வது தவணை ₹2000, அடுத்த ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முறைகேடாக உதவித்தொகை பெற்றுவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டோர், 18 வயது நிறைவடையாதவர்கள், நில உரிமையை உறுதிப்படுத்தாதவர்கள் என சுமார் 41 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் பெயரை <
News October 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 25, 2025
CONG-க்கு மரியாதை கொடுத்தால் உழைப்போம்: MP

காங்கிரஸுக்கு உரிய மரியாதை அளிப்பவர் தான் தமிழ்நாட்டின் CM ஆக முடியும் என அக்கட்சி MP மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மரியாதை கொடுக்காதவர்கள் எதிர்க்கட்சி தலைவராகவே திருப்தி அடைய வேண்டியதுதான் எனவும், உரிய மரியாதை அளித்தால் ராகுல், பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸில் குரல் எழுந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


