News March 6, 2025

டேட்டிங் செயலிகள் மூலம் பழகி 60 பெண்கள் பலாத்காரம்

image

டேட்டிங் செயலிகள் காதல் உறவுகள் மலர உதவுகிறதோ இல்லையோ, காம வெறியர்களுக்கும், மோசடி பேர்வழிகளுக்கும் ரொம்பவே உதவுகிறது. பிரிட்டனில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான 60-க்கு மேற்பட்ட பெண்களை மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சீன இளைஞர் ஜின்ஹவ் சுவா. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரின் போனை சோதித்ததில், சுமார் 1300 ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டறியபட்டுள்ளது. பெண்களே, கவனமாக இருங்க!

Similar News

News March 7, 2025

பின்வாங்கினார் டொனால்ட் டிரம்ப்

image

மெக்சிகோ நாட்டின் மீதான வரி விதிப்பை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் அதிபராக பொறுப்பேற்றவுடன், அண்டை நாடுகளான கனடா & மெக்சிகோ பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதித்தார். இது வர்த்தகப் போரை உருவாக்கும் நிலை ஏற்பட்டதால், சில பொருட்களுக்கு வரியை நிறுத்திவைத்து, டிரம்ப் பின் வாங்கியுள்ளார். ஆனால், கனடா மீதான வரிகள் குறைக்கப்படவில்லை.

News March 7, 2025

ராசி பலன்கள் (07 – 03 – 2025)

image

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – லாபம் ➤கடகம் – போட்டி ➤ சிம்மம் – விவேகம் ➤கன்னி – தடங்கல் ➤துலாம் – அமைதி ➤விருச்சிகம் – சாந்தம் ➤தனுசு – அன்பு ➤மகரம் – மகிழ்ச்சி ➤கும்பம் – வெற்றி ➤மீனம் – இன்பம்.

News March 7, 2025

கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

image

1 முதல் 9க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3ஐ கூட்டுங்கள். அதில் கிடைக்கும் விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!