News March 4, 2025
60% போக்சோ வழக்குகள் நிலுவையில்.. ராமதாஸ் சாடல்

60% போக்சோ வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார். 2015-22 வரை 21,672 போக்சோ வழக்குகள் பதிவானதாகவும், அதில் 30% போதிய ஆதாரங்கள் இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஓராண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டிய இவ்வழக்குகள், இன்று வரை தேங்கி இருப்பதற்கு TN அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News September 17, 2025
தமிழகத்துக்கு கூடுதலாக 350 MBBS இடங்கள்

தமிழகத்திற்கு கூடுதலாக 350 MBBS இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கூடுதல் மருத்துவ இடங்கள் அனுமதிக்கான கல்லூரிகள் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், TN-ல் 7 தனியார் கல்லூரிகளுக்கு தலா 50 இடங்கள் என மொத்தம் 350 இடங்கள் அதிகரித்துள்ளன. இந்தியளவில் 6,850 இடங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த MBBS இடங்கள் எண்ணிக்கை 1,23,700ஆக உயர்ந்துள்ளது.
News September 17, 2025
திமுக மட்டுமே வெற்றி பெறும்: செந்தில் பாலாஜி

2026-ல் திமுகவின் வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்கியுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், எதிரிகள் யாராக இருந்தாலும், எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் உறுதியாக நாம்தான் வெற்றி பெற போகிறோம், நாம் மட்டுமே ஜெயிக்க போகிறோம் என்றும் சூளுரைத்துள்ளார். மேலும், 200 தொகுதிகளில் வெல்வோம், வரலாறு படைப்போம் என்றும் கூறினார்.
News September 17, 2025
T20 – டாப் 10இல் அசத்தும் இந்தியர்கள்

ICC ஆண்கள் T20 தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அதேபோல், டாப் 10 பட்டியலில் பலரும் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். அவர்கள் யார்? எந்த இடத்தை பிடித்துள்ளனர்? என்பதை போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. T20இல் அசத்தும் நமது இந்திய வீரர்களுக்கு லைக் போடுங்க.