News September 9, 2025

அடுத்த 2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகள்?

image

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், அவர்களின் பதவி உயர்வுக்கும் TET தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டமிடலில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருகிறதாம். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் 6 தகுதி தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 12, 2026

போரின் தாக்கம்.. சிமென்ட் விலை உயர வாய்ப்பு!

image

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் இந்தியாவில் சிமென்ட் துறையையும் பாதித்துள்ளதாக ‘எலாரா கேபிடல்’ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 15 நாள்களில், கச்சா எண்ணெய் விலை 39%, நிலக்கரி 14% அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. சிமென்ட் தயாரிப்புக்கான எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், இதனை ஈடுசெய்ய சிமென்ட் மூட்டை சுமார் ₹6 வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

News March 12, 2026

FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய சரிவு!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $80(இந்திய மதிப்பில் ₹7,375) குறைந்து $5,150 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 அவுன்ஸ் $4 குறைந்து $85 ஆக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

News March 12, 2026

தமிழ்நாட்டை ATM-ஆக நினைக்கும் திமுக: PM மோடி

image

தமிழ்நாட்டின் வளங்களை ஒரு குடும்பம் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதாக திமுகவை PM மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டை ATM போல் நினைத்து சுரண்டுவதாக கூறினார். அமைச்சர்கள் மாறலாம், MLA-க்கள் மாறலாம் ஆனால், அதிகாரம் மட்டும் ஒரு குடும்பத்திடம் சிக்கித் தவிப்பதாக சாடினார்.

error: Content is protected !!