News March 29, 2025

வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகள் 6% குறைப்பு:CM

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் விழிப்புணர்வு, கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில் முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக திமுக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6% குறைந்துள்ளதாகவும் கூறினார். SC, ST கல்வி மேம்பாட்டிற்காக ₹2,798 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

Similar News

News January 18, 2026

TN காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

ஹாஸ்பிடலில் துரைமுருகன்.. நலம் விசாரித்த CM ஸ்டாலின்

image

அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்த CM ஸ்டாலின், துரைமுருகனின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். மேலும், உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்கவும் டாக்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், அவரது உடல்நலம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

News January 17, 2026

ஈரானில் இருந்து திரும்பும் இந்தியர்கள்

image

உள்நாட்டு எதிர்ப்புகள் மற்றும் அமெரிக்காவுடனான போர் அச்சுறுத்தல் காரணமாக ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் அங்கிருந்து திரும்பி வருகின்றனர். பதட்டமான சூழ்நிலை காரணமாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு இந்திய தூதரகம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. ஈரானில் 9,000 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் எனவும், தற்போது ஈரானை விட்டு வெளியேறுவது நல்லது எனவும் இந்திய தூதரகம் பரிந்துரைத்தது.

error: Content is protected !!