News March 22, 2024
ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயம்!

ஈஷா யோகா மையத்தில் கடந்த 2016 முதல் பணியாற்றிய 6 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசியை சேர்ந்த திருமலை என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய தனது சகோதரர் காணாமல் போனதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை துரிதப்படுத்தி விசாரித்து ஏப்ரல் 8இல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Similar News
News April 27, 2025
ஆண் நண்பருடன் நடிகை உல்லாசம்.. வீடியோ கசிந்தது

பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் நட்சத்திரம் சாஜல் மாலிக், ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பிரபலங்களின் அந்தரங்க வீடியோ அடிக்கடி கசிந்து வருகிறது. அந்த வரிசையில், சாஜல் மாலிக்கும் இணைந்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலரும், டிஜிட்டல் உலகில் தற்போது பாதுகாப்பே இல்லை என்று சாடியுள்ளனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 27, 2025
பஹல்காம் இந்து – முஸ்லீம் மோதல் அல்ல: காஜல் ஆவேசம்!

பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், ‘இது இந்து – முஸ்லீம் பிரச்னை கிடையாது, பயங்கரவாதத்திற்கும், மனிதநேயத்திற்கும் இடையே நடக்கும் பிரச்னை’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பிரிவினை எப்போதும் பயத்தையும், அதிக வெறுப்புணர்வையும் மட்டுமே உருவாக்கும் என சுட்டிக்காட்டி, இந்த சமயத்தில் தான் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News April 27, 2025
வெள்ளி விலை 4 மாதங்களில் ரூ.14,000 அதிகரிப்பு

கடந்த ஜன. 1-ம் தேதி 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ ரூ.98,000ஆகவும் விற்கப்பட்டது. பிறகு ஜெட் வேகத்தில் உயர்ந்த விலை, குறையவே இல்லை. சுமார் 2 வாரங்களாக விலை மாறாமல் 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. நேற்று திடீரென 1 கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.112ஆகவும், 1 கிலோ ரூ.1,000 அதிகரித்து ரூ.1.12 லட்சமாகவும் விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது.