News May 7, 2025
ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
கரூரில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04324-225100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
விருத்தாசலத்தில் களமிறங்க பிரேமலதா திட்டம்!

விஜயகாந்த் பாணியில் வரும் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் களமிறங்க பிரேமலதா தயாராகி வருகிறார். அதனைக் கருத்தில் கொண்டே கடலூரில் நேற்று அக்கட்சியின் மாநாடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 2011 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனதை போல, பிரேமலதா வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று துணை முதல்வராவார் என LK சுதீஷ் பேசியிருந்தார். இது பற்றி உங்கள் கருத்து?
News January 10, 2026
முதல் நாளிலேயே ₹100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில், ‘ராஜாசாப்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ₹112 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தபோதும், தியேட்டரை நோக்கி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர். இதனால், பொங்கல் (சங்கராந்தி) விடுமுறையில் இப்படம் மேலும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


