News April 21, 2024
குழந்தையை காப்பாற்ற முயன்று 6 பேர் பலி

குழந்தையை காப்பாற்றச் சென்று 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர கன்னடாவில் விடுமுறையை கொண்டாடச் சென்ற நபர்கள் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்ற முயன்றபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஹூப்ளியை சேர்ந்தவர்கள் என்பதும், இறந்த 6 பேரில் 4 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News January 2, 2026
ஜன.19-ல் திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

கடந்த டிச.29-ல் பல்லடத்தில் ‘திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு’ நடைபெற்றது. இந்நிலையில், ஜன.19-ல் தஞ்சை செங்கிப்பட்டியில் ‘திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தேர்தல் பணிகளுக்கு நிர்வாகிகளை தயார்படுத்தும் விதமாக அடுத்தடுத்து மாநாடுகளை திமுக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
News January 2, 2026
PM KISAN அடுத்த தவணைத் தொகை எப்போது கிடைக்கும்?

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகையை (₹2,000) மத்திய அரசு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவணைத் தொகை தாமதமின்றி கிடைக்க, விவசாயிகள் e-KYC அப்டேட் செய்வது அவசியம். <
News January 2, 2026
இந்தூரில் விநியோகிப்பட்டது விஷம்: ராகுல் காந்தி

<<18732273>>இந்தூர் குடிநீர்<<>> விவகாரம் தொடர்பாக ம.பி., அரசை கண்டித்துள்ள ராகுல் காந்தி, இந்தூரில் விநியோகிக்கப்பட்டது குடிநீர் அல்ல; விஷம் என்று கடுமையாக சாடியுள்ளார். வீடுதோறும் மரண ஓலம் கேட்கும் நிலையில், பாஜக அரசு ஆணவத்தை பதிலாக அளித்துள்ளதாக கூறியுள்ளார். இருமல் மருந்து, மருத்துவமனையில் எலி, குடிநீர் மாசு என ஒவ்வொரு முறை ஏழைகள் சாகும்போதும், PM மோடி வழக்கம்போல மெளனமாகவே இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


