News April 13, 2025
டாஸ்மாக்கில் 6 புதிய பீர்கள்.. விலை இதுதான்

டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள 6 புதிய <<16067320>>பீர் <<>>விலை விவரம் கசிந்துள்ளது. ஹைதராபாத் நிறுவனத் தயாரிப்பில் புதிய பீர்கள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், கர்நாடகா நிறுவனத்தின் மேலும் 5 புதிய பீர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவை ரூ.182-ரூ.250 வரை விற்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே டாஸ்மாக்கில் ரூ.140- ரூ.210 விலையில் பீர்கள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 4, 2025
இன்று மாலை 6:14 மணிக்கு இத மிஸ் பண்ணிடாதீங்க!

மனிதர்களை ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கும் வானில், இன்று மாலை 6:14 மணிக்கு அதிசயம் நிகழவுள்ளது. நிலா Full cold moon என்ற நிலையை அடைந்து, 14% பெரிதாகவும், பிரகாசமாகவும் ஒளிரவுள்ளது. நாளை அதிகாலை 4:44 மணிக்கு உச்சநிலையை அடையும் இந்த நிலவை வெறும் கண்ணிலேயே பார்க்கலாம். கடைசியாக 2023-ல் இந்த Full cold moon தோன்றிய நிலையில், அடுத்து 2028-ல் தான் வருமாம். எனவே இன்னைக்கு மிஸ் பண்ணிடாதீங்க!
News December 4, 2025
15 வயதில் PhD முடித்த ‘குட்டி ஐன்ஸ்டீன்’

15 வயதில் மாணவர்கள் பலருக்கு, 10-ம் வகுப்பு முடிப்பதே பெரும்பாடாக உள்ளது. ஆனால் பெல்ஜியத்தை சேர்ந்த லாரன்ட் சைமன்ஸ், 15 வயதில் குவாண்டம் இயற்பியலில் PhD முடித்து சாதனை படைத்துள்ளார். Black holes உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்த லாரன்ட், ‘சூப்பர் மனிதர்களை’ உருவாக்குவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார். 12 வயதிலேயே டிகிரி முடித்த இந்த ‘குட்டி ஐன்ஸ்டீன்’, தற்போது 2-வது PHD படிப்பையும் தொடங்கியுள்ளார்.
News December 4, 2025
13 ஆண்டுகளுக்கு பிறகு..

சையது முஷ்டாக் அலி தொடரின், Knock- Out சுற்றில் விளையாட ரோஹித் விருப்பம் தெரிவித்துள்ளாராம். அவர் கடைசியாக 2011-12 சீசனில் மும்பை அணிக்காக இத்தொடரில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்துக் கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என ரோஹித் & கோலியிடம் BCCI அறிவுறுத்திய நிலையில், இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.


