News April 6, 2025

நீலகிரிக்கு 6 புதிய அறிவிப்புகள்

image

நீலகிரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கூடலூரில் ரூ.26.6 கோடி மதிப்பீட்டில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும். ‘எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்’ என்ற பயணத் திட்டத்தின் கீழ் 10 பேருந்துகள் இயக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் உருவாக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Similar News

News October 22, 2025

FLASH: மேலும் 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு

image

தொடர் மழை காரணமாக மேலும் 3 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

News October 22, 2025

பெயரில் மாற்றம் செய்த ஹன்சிகா

image

ஹன்சிகாவின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, அவர் திடீரென தன்னுடைய பெயரில் மாற்றம் செய்துள்ளார். அதாவது, ஆங்கிலத்தில் ‘Motwani’ என்பதை தற்போது ‘Motwanni’ என மாற்றம் செய்து இருக்கிறார். நியூமராலஜி படி பெயரை மாற்றினால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என ஹன்சிகா நம்புகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

News October 22, 2025

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தொடர் கனமழையால் தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வீட்டில் பத்திரமாக இருங்கள்..!

error: Content is protected !!