News February 25, 2025
பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை

பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை அளிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ரயில்நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி வாசகத்தை திமுகவினர் அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ரயில்வே சொத்து சட்டப்படி, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை 6 மாத சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
Similar News
News March 5, 2026
2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
News March 5, 2026
BREAKING: கூட்டணி.. இபிஎஸ் புதிய அறிவிப்பால் பரபரப்பு

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி இறுதி வடிவம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சியின் மா.செ., கூட்டத்தில் EPS அறிவித்துள்ளார். எனவே, தேர்தல் பணிகளை முடுக்கிவிடும்படி அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திமுகவும் தொகுதிப் பங்கீட்டை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News March 5, 2026
நாதகவை பார்த்து பலருக்கு கண்ண உறுத்துது: சீமான்

இன்று அரசியல் என்பது அரிசியும், பருப்பும், வேட்டியும், சேலையும், ஆயிரமும், ஐநூறுமாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார். 100 ரூபாயை கொடுத்துவிட்டு ₹200-க்கு விளம்பரம் செய்வதாக கூறிய அவர், இந்த அரசியலை மாற்ற வேண்டும் என்றார். மேலும், நாதக தனித்து போட்டியிடுவது பலருக்கு கண்ணை உறுத்துகிறது எனவும், கூட்டணி வைக்காமல் எப்படி ஜெயிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் சவால்விட்டிருக்கிறார்.


