News January 9, 2025
திருப்பதி நெரிசலில் 6 பேர் பலி: மோடி இரங்கல்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழப்பு நேரிட்டது குறித்த தகவலை கேள்விப்பட்டு வேதனை அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், அதேநேரத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
மயிலாடுதுறை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

மயிலாடுதுறை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.
News January 19, 2026
கொஞ்சம் பொறுப்புடன் இருங்க நெட்டிசன்ஸ்!

சோஷியல் மீடியா யுகத்தில் எல்லாமே Content. வெளிவரும் அனைத்து வீடியோவையும் உடனே நம்பி, ஒருவர் மீது விமர்சனங்களை கொட்ட வேண்டாம். <<18894136>>கேரளாவில் <<>>பெண் ஒருவர் குற்றம்சாட்டியதில், அவமானம் தாங்க முடியாத ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொஞ்சம் யோசியுங்கள். ஒருநாள் நாமும் இதேபோன்ற ஒரு சூழலால் பாதிக்கப்படலாம் என்பதையும் உணருங்கள். எங்கோ யாரோ வேறு ஒருவரின் கமெண்ட்டும் ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கலாம்!
News January 19, 2026
அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது: அன்பில் மகேஸ்

2003-ல் ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்த அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை மேற்கோள்காட்டிய அவர், 5 ஆண்டுகளாக அதை செய்யாமல், திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன் என்றார். மேலும், இது தேர்தல் நாடகம்தான் எனவும் விமர்சித்துள்ளார்.


