News April 4, 2025

கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்து 6 பேர் பலி

image

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நாந்தேட் பகுதியில் டிராக்டரில் 11 பேர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்ததில், அதிலிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ₹2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார்.

Similar News

News April 11, 2025

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கமா?

image

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்வது குறித்து கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.<<16061152>> பொன்முடியின் பேச்சு<<>> பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சைவம், வைணவம், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.

News April 11, 2025

அமித்ஷாவின் மேடையில் 6 சீட்டு யாருக்கு?

image

சென்னையில் முகாமிட்டுள்ள அமித்ஷாவை சுற்றியே இன்று தமிழக அரசியல் களம் சுழல்கிறது. 2026 தேர்தலுக்காக NDA கூட்டணியை இறுதி செய்யவே அமித்ஷா வந்துள்ளார். இந்நிலையில், ADMK, PMK, TMC, AMMK தலைவர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், மேடையில் 7 நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 1 அவருக்கு மீதமுள்ள 6 யார் யாருக்கு?

News April 11, 2025

மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: வருந்திய துரைமுருகன்

image

மாற்றுத்திறனாளிகள் <<16019356>>குறித்த பேச்சுக்கு<<>> அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக துரைமுருகன் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்நிலையில், தனது பேச்சுக்காக துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். பொன்முடியை தொடர்ந்து தனது பதவியும் பறிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!