News June 21, 2024
நாளை ரீ-ரிலீசாகும் விஜய்யின் 6 படங்கள்

நடிகர் விஜய்யின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை அவரது 6 படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி, கத்தி, மெர்சல், போக்கிரி, மாஸ்டர், கில்லி ஆகிய படங்களின் டிக்கெட் புக்கிங் தற்போது. சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிபெற்ற கில்லி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் பல படங்களுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. நாளை உங்கள் பிளான் என்ன?
Similar News
News September 13, 2025
அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா திட்டவட்டம்

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதியை நிலைநாட்ட, டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்த நிலையில், இப்போதைக்கு அந்த வாய்ப்பே கிடையாது என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் இப்போதைக்கு நிற்க வாய்ப்பில்லை.
News September 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 13, 2025
மீண்டும் வருமா அந்த மகிழ்ச்சி!

மனிதரின் கிரியேட்டிவிட்டியால் தோன்றுவது தான் டெக்னாலஜி. ஆனால், அது இன்று நம் வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், நாம் இழந்துவிட்ட திறன்களும் ஏராளம். குறிப்பாக, டெக்னாலஜி அவ்வளவாக ஊடுருவாத நம் குழந்தைப் பருவம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது நினைவிருக்கிறதா.. எப்போதாவது அந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறீர்களா?